Sunday, January 21, 2007

06. முதல்வர் வீட்டிற்கு சாய்பாபா வருகை
















சென்னை: முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு சத்யசாய் பாபா ஆசி வழங்கினார்.

சென்னை வந்துள்ள சத்ய சாய்பாபா தமிழக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு நேற்று மாலை சென்றார். அவரை அமைச்சர்கள் தயாநிதி மாறன், துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். முதல்வரின் வீட்டிற்குள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி மற்றும் பலர் சாய்பாபாவை அழைத்துச் சென்றனர். அங்கு முதல்வரின் குடும்பத்தினர் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.


முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி ஆகியோருக்கு சாய்பாபா ஆசி வழங்கினார். அப்போது, "தாய் காவியம்' புத்தகத்தை சாய்பாபாவுக்கு கருணாநிதி வழங்கினார். 20 நிமிடங்கள் இவர்களது சந்திப்பு நடந்தது. இதன்பின் சாய்பாபா புறப்பட்டுச் சென்றார்.